Tuesday, August 20, 2013

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்-96



நாம் இதுவரையிலும் அதாவது ஓப்பன் ஆஃபிஸ் பற்றிய கடந்த 95 தொடர்களிலும்  இந்த ஓப்பன் ஆஃபிஸ் என்ற பயன்பாட்டிலுள்ள நம்முடைய பல்வேறுபணிகளுக்காகஉதவிடும் பயன்பாடுகளை  மட்டுமே பார்த்து வந்தோம் ஆயினும் விபிஏ போன்று ஒரு நிரல்தொடரை அல்லது கட்டளைகளின் குறிமுறைகளைகூட இந்த ஓப்பன் ஆஃபிஸின் OpenOffice.org Basic என்பதன் மூலம் உருவாக்கிடமுடியும் என்பதை இனிவரும் தொடர்களில் நாம் பார்க்கவிருக்கின்றோம்  
விசுவல் பேஸிக் அல்லது விசுவல் பேஸிக் அப்ளிகேசன் ஆகியவற்றை பற்றி அறிமுகம் ஆனவர்கள் மிகஎளிதாக இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கை உடனடியாக அறிந்து கொள்ளமுடியும்  புதியவர்கள் மிகவிரைவாக இதனை அறிந்து கொண்டு தங்களின் நிரல்தொடர் எழுதும் திறனை வளர்த்துகொண்டு சிறந்த நிரல்தொடர்வல்லுநராக தங்களை மேம்படுத்திகொள்ளமுடியும்

இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் ஆனது 1. மாறி, செயலி,கண்ணி  ஆகியவற்றை  வரையறுத்திட  The language of OpenOffice.org Basic, 2. எண்களையும் சரங்களையும் தொகுத்திடும் செயலிகளை கொண்ட runtime library, 3.பயன்பாடுகளை மாறுதல் செய்ய, அச்சிட ,சேமித்திட இடைமுகம் செய்திட OpenOffice.org API (Application Programming Interface), 4.கட்டுப்பாடுகளையும் நிகழ்வுகளையும் கையாண்டிட Dialog Editor , ஆகிய நான்கு வகை உட்கட்டமைப்பை கொண்டதாகும்
பொதுவாக விபிஏ ஆனது இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கின் முதலிரண்டுடன் மட்டும் இடைமுகம் செய்ய அனுமதிக்கின்றது
இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கை பயன்படுத்தவிழைபவர்கள் விபிஏபோன்று அதற்கஎன தனியானதொரு பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து அல்லது பணம் கொடுத்து வாங்கி நம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்திடவேண்டும் என கட்டுபாடு எதுவுமில்லாமல்   இதிலேயே மேக்ரோவை உருவாக்கி பரிசோதித்து பார்ப்பதற்கு உதவும்  (integrated development environment (IDE)), மேக்ரோவை இயக்கிபார்த்திட மொழிமாற்றி( interpreter),மற்ற ஆவணங்களுடன் இடைமுகம் செய்தல்( interfaces) ஆகிய பணிகளை சுலபமாக செய்திடமுடியும் 
 இது ஜாவா,சி++ போன்று சிக்கலானதன்று மிகஎளிதானது என்ற தகவலை மனதில் கொள்க
சிமொழிபேன்று GoTo and GoSub. என்பனபோன்ற தொடக்கநிலை கட்டபாட்டு கட்டமைப்புகள் எதுவும் இதில் இல்லை   
பொருள் நோக்கு நிரல்தொடரின் (object-oriented programming) பயனை நாம் இதில் பெறமுடியும்
மேலும் ஜாவா, சி,சி++ போன்ற மொழிகளில் எழுதப்படும் கட்டளை வரிகளை முதலிலமொழிமாற்றம் செய்தபின் அந்த திரைக்கு வெளியே வந்து இதனை தனியாக இயக்கி சரியாக செயல்படுகின்றதாவென சரிபார்த்திடவேண்டும் ஆனால் இந்த  ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கில் அவ்வாறான கட்டுபாடுகள் எதுவுமில்லாமல் கட்டளைவரிகளை மொழிமாற்றம் செய்தவுடன் தானாகவே இதே சாளரத்தில் அவை செயல்படுத்தபட்டால் என்ன விளைவுஏற்படும் என தானாகவே இயங்கிடசெய்து சரிபார்த்திடமுடியும்  இது முதலில் குறிமுறைகளில் ஏதேனும் இலக்கண பிழை உள்ளதாவென சரிபார்த்தபின்னர் வரிவரியாக மொழிமாற்றம் செய்து இயக்கி சரிபார்க்கின்றது
இதில் ஒவ்வொரு வரியும் தனித்தனியானதொரு கட்டளையாக அதாவாது கணித வெளிப்பாடுகள் ,கண்ணிகள் செயலிகள், ஆகிய அனைத்தும் செயல்படுத்தபடுகின்றது

LongExpression = (Expression1 * Expression2) + _(Expression3 * Expression4) + _
(Expression5 * Expression6) + _(Expression7 * Expression8)

 ஒரேவரிக்குள் ஒருகட்டளையானது முடிந்திட வேண்டும் என்பதே இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கிற்கும் ஜாவா, சி,சி++ போன்ற மொழிகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடாகும்  ஒருவரியில் குறிப்பிட்ட கட்டளை முடியவில்லையெனில் ஒரு சிறு அடிக்கோடுடன் அதேவரியின் கட்டளை அடுத்தவரியிலும் தொடரும் என்பதே இதன் தனித்தன்மையாகும்
 இந்த அடிக்கோட்டினை தெடர்ந்து காலியான இடம் அல்லது தாவி,குறிப்புகள் இருக்ககூடாது அவ்வாறு இருந்தால் குறிப்பிட்ட வரியானது பிழையானது என காண்பித்துவிடும்
அந்த ஒரேவரியில் உள்ள பல கணித வெளிப்பாடுகளை முக்காற்புள்ளிகொண்டு பிரித்திடலாம்

         a = 1 : a = a + 1 : a = a + 1
மேலும் இந்த கட்டளைவரிகளை பற்றிய விளக்ககுறிப்புகளை ஒற்றை மேற்கோள்குறியுடன் குறிப்பிடவேண்டும்
Dim A ' This is a comment for variable A
அல்லது Rem என்ற சொற்களுக்கு இடையில் குறிப்பிடவேண்டும்
Rem This comment is introduce by the keyword Rem
இந்த விளக்ககுறிப்புகள் ஒன்றிற்குமேற்பட்ட வரிகளுடன் இருந்தால்  ஒவ்வொரு வரியும் ஒற்றை மேற்கோள்குறியுடன் குறிப்பிடவேண்டும்
Dim B ' This comment for variable B is relatively long
' and stretches over several lines.

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கில் ஆயிரத்திற்கும் அதிகமான அடையாளக்குறியீடுகள் உள்ளன
பெரிய எழுத்து சிறியஎழுத்து என்ற வேறுபாடுகள் எதுவும் இதில்  இல்லை அதிகபட்சம் 255 எழுத்துகள் இருக்கலாம் சிறப்பு குறியீடுகள் கொண்டதன்று  இலத்தீன் எண்கள் அடிக்கோடுகள் மட்டுமே  இந்த அடையாளக்குறியீட்டில் இருக்கும்  மாதிரி அடையாளக்குறிகள் பின்வருமாறு
Surname       ' Correct
Surname5      ' Correct (number 5 is not the first digit)
First Name     ' Incorrect (spaces are not permitted)
DejaVu        ' Incorrect (letters such as e, a are not permitted)
5Surnames     ' Incorrect (the first character must not be a number)
First,Name    ' Incorrect (commas and full stops are not permitted)
அடைப்புகுறிக்குள் காலிஇடமும் சிறப்புகுறியீடுகளும் அனுமதிக்கபடும்
Dim [First Name] As String 'Space accepted in square brackets
Dim [DejaVu] As Integer 'Special characters in square brackets


மாறியை வெளிப்படையாக ஒரு கட்டளை தொடருக்குள் அறிவிப்பது சிறந்தது
Dim MyVar1, MyVar2 As Integer
என்றவாறு பலமாறிகளை ஒரேவரிக்குள் அறிவிப்பு செய்யலாம்

Saturday, August 3, 2013

ஓப்பன் ஆஃபிஸ்-95-பொது




கடந்த ஓப்பன் ஆஃபிஸ்-94 தொடரில் கண்டவாறு கருவிபட்டியை நாம் விரும்பியவாறு மாற்றியமைக்கும்போது அதிலுள்ள தனித்தனி கருவிகளின் உருவபொத்தான்களின் உருவையும் (குறிப்பு. இவை கட்டளை பட்டி போன்று சொற்களாக இருக்காதவையாகும்) மாற்றியமைத்திடலாம் இங்கு தொலைநகல் அச்சுபொறி கட்டளைக்கான உருவபொத்தானை கருவிபட்டியில் சேர்ப்பதாக கொள்வோம்  அதற்காக முதலில் நம்முடைய கணினியில் fax driver என்பது நிறுவ பட்டுள்ளதாவென்றும் fax modemஇணைக்கபட்டுள்ளதா என்றும் உறுதி செய்துகொள்க  
பின்னர் மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => Options => Open Office.org  Writer => Print => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் Options - Open Office.org Writer - Print என்ற (படம்-1)உரையாடல் பெட்டியில் fax என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் fax என்பதை தெரிவுசெய்துகொண்டு OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக


படம்-1

பின்னர் நடப்பில் இருக்கும் கருவிபட்டியின் கடைசியாக இருக்கும் அம்புக்குறியை தெரிவு செய்துசொடுக்கியவுடன் விரியும் கட்டளைபட்டியிலிருந்து Customize Toolbar என்றவாறு கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக அல்லது மேலேகட்டளை பட்டையிலிருந்து View => Toolbar => Customize=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்து Tools => Customize=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும்Customize என்ற திரையில் Toolbars என்ற திரையை தோன்றிடசெய்க
இதில் Addஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும் Add commands என்ற (படம்-2)உரையாடல் பெட்டியில் மேல்நோக்கு அல்லது கீழ்நோக்கு அம்புக்குறியை தேவையானவாறு பயன்படுத்தி நகர்த்தி Documents என்பதை category என்றபகுதியிலிருந்து தெரிவு செய்து கொண்டும் Send Default Fax என்ற கட்டளையை commands என்றபகுதியிலிருந்து தெரிவு செய்து கொண்டும் Addஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக


படம்-2
உடன் Customize என்ற திரையில் இந்த உருவபொத்தான் ஆனது கருவிபட்டியில் நாம் விரும்பும் இடத்தில் மிக்சசரியாக அமர்ந்திடுமாறு சரிசெய்து கொண்டுOKஎன்ற பொத்தானையும் பின்னர் Close என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக இப்போது கருவிபெட்டியில் நாம் சேர்த்த Send Default Fax என்ற (படம்-3)உருவபொத்தான் வீற்றிருப்பதை காணலாம் 


படம்-3
அவ்வாறே நாம் செயற்படுத்திட விரும்பும் கட்டளையானது நாம் விரும்பிய குறுக்கு வழி விசையின் வாயிலாக செயற்படுத்திடுவதற்காக கட்டமைத்திட மேலேகட்டளை பட்டையிலிருந்து View => Toolbar => Customize=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது திரையின் மேலேகட்டளை பட்டையிலிருந்து Tools => Customize=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Customize என்ற திரையில் Keyboard என்ற திரையை தோன்றிடசெய்க  பின்னர் நாம் செய்திடும் மாறுதல்கள் ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டரில் மட்டுமெனில் writerஎன்ற வானொலி பொத்தானையும் ஓப்பன் ஆஃபிஸின் அனைத்து ஆவணங்களிலும் எனில் OpenOffice.org என்ற வானொலி பொத்தானையும் தெரிவுசெய்துகொள்க அதன்பின்னர் தேவையான செயலியை Functionsஎன்பதன்கீழுள்ள Category , Functionஆகியவற்றின் பட்டியலின் வாயிலாக தெரிவுசெய்துகொள்க மேலும் இதனை செயற்படுத்துவதற்கான குறுக்குவழிவிசையை தெரிவு செய்வதற்காக Shortcut keys என்பதன்கீழுள்ள  Ctrl+3 என்றவாறு (படம்-4) ஏதேனுமொரு குறுக்குவழிவிசையை தெரிவு செய்து கொண்டு முதலில் Modify என்ற பொத்தானையும் பின்னர் OKஎன்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக


படம்-4
இதன்பின்னர் இந்த மாறுதல்கள் வேறு ஆவணங்களிலும் செயல்படசெய்வதற்காக இதே உரையாடல் பெட்டியில் saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் Save Keyboard Configurationஎன்ற உரையால் பெட்டியில் கோப்பின்வகை ,பெயர் ஆகியவற்றை தெரிவுசெய்துகொண்டு saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்துகொள்க

இந்த ஓப்பன் ஆஃபிஸில் மேலும் தேவையான புதிய வசதிகளை பெறவிரும்பினால் http://extensions.services.openoffice.org/.என்ற இணைய தளத்திற்கு சென்று கட்டணம் எதுவுமின்றி தேவையான புதிய விரிவாக்க வசதிகளை பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்திகொள்க 
இவ்வாறான பதிவிறக்கம் செய்யபட்ட விரிவாக்க வசதிகளை நிறுவி பயன்படுத்திட மேலேகட்டளை பட்டையிலிருந்து Tools  => Extension Manager => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும் Extension Manager என்ற திரையில்  Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் திரையில் நாம் பதிவிறக்கம் செய்த விரிவாக்க வசதிக்கான பயன்பாட்டு கோப்பினை தெரிவுசெய்துகொண்டுopen என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த விரிவாக்க வசதி நம்முடைய ஓப்பன் ஆஃபிஸில்  நிறுவபட்டுவிடும்